Share this book with your friends

Indian Constitutions / இந்திய அரசியல் சட்டம்

Author Name: K. Senthilkumar, N. Raja, Nithila Kannan, T.Loganayagi | Format: Paperback | Genre : History & Politics | Other Details

இந்தியாவிற்கென்று அரசியல் சட்டம் அவசியமானது என்று எம்.என்.ராய் இந்திய விடுதலைக்கு முன்பே 1934 ல் கருத்து தெரிவித்துள்ளார்.இன்றைய நவீன கால யுகத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை போற்றுவதற்கு காரணம் அதனுடைய எழுதப்பட்ட அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக கலாச்சாரம் போன்ற காரணிகள் ஆகும்.இவ்வாறான அரசியல் சட்டம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை அடிப்படையாக  கொண்டு உருவாக்கம் பெற்றது.உரிமைகள்,கடமைகள் நிர்வாகம், சுதந்திர அரசு அமைப்புகள், ஆணையங்கள், நீதித்துறை சார்ந்த கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.368 சட்டத்தின் கீழ் சட்ட சீர்திருத்தம் சிறந்து செயல்படுவதால் பெருவாரியான சூழ்நிலைகளில் காலத்திற்கு ஏற்றார் போல சட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது சில தேவையான பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.மாணவர் சமூகம் கண்டிப்பாக அரசியல் சட்டம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.இதனாலேயே பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் அரசியல் சட்டம் கட்டாய பாடமாக உள்ளது.ஒவ்வொரு இந்திய பிரஜையும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.போட்டி தேர்வுகளுக்கும் இப்புத்தகத்தை படித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More...
Paperback
Paperback 449

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர்.கு.செந்தில்குமார், முனைவர்.நா.ராஜா, முனைவர. நித்திலாகண்ணன், முனைவர். த. லோகநாயகி

முனைவர்.கு.செந்தில்குமார் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு இந்திய அயல்நாட்டு கொள்கை  ஆகும்.

முனைவர்.நா.ராஜா அண்ணாமலை பல்கலைகழகம் வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பத்து ஆண்டுகள் பணியாற்றி,தற்ச்சமயம் அயர்பணி நிமித்தம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில்  பணிபுரிகிறார்.பதினைந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் “தேர்தல் அறிக்கை” தொடர்பான தலைப்பில் முனைவர் பட்டத்தை பெற்று  பல ஆராய்ச்சி கட்டுரைகளை  சர்வதேச அளவில் எழுதியுள்ளார்.இவர் தற்ச்சமயம் நான்கு முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு நெறியாளராக உள்ளார். 

முனைவர்  நித்திலாகண்ணன்,தற்சமயம் சேலம் அரசு கலை கல்லூரியில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்றுள்ளார்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அயல்நாட்டு கொள்கை” ஆகும்.

முனைவர். த. லோகநாயகி, கௌரவ விரிவுரையாளராக  அரசியல் அறிவியல் துறை, திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, இராசிபுரத்தில் பணிபுரிகிறார்.இவர் முனைவர் பட்டத்தை  அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.அரசியல் அறிவியல் பாடத்தில் மாநில தகுதி தேர்வு (SET) 2016-ஆம் ஆண்டும், தேசிய தகுதி தேர்வு (NET) 2018-ஆம் ஆண்டும் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.இவர் 7 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றுள்ளார்.

Read More...

Achievements

+9 more
View All