Share this book with your friends

UDUMALAIKKAARAN KATHAIGAL / உடுமலைக்காரன் கதைகள் Mind and mind-based space / மனமும் மனம் சார்ந்த இடமும்

Author Name: Mahesh Kumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

70களில் உடுமலையில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். நண்பர்கள், விளையாட்டு என்பதைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக அறிந்துகொள்ளாமல், அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கை இன்பமயமானதாக இருந்தது. அப்போதைய நிலவியலும், உளவியலும் கலந்த எங்கள் அனுபவங்களையும், பார்த்த-கேட்ட-நுகர்ந்தவைகளையும் உண்மையும் புனைவும் பிணைந்த கதைகளாக எழுதி அவற்றை தலைமுறைகள் தாண்டிக் கடத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் விளைந்தது இந்த சிறுகதைத் தொகுப்பு. 

“ஒவ்வொரு நொடியிலும் இறந்த காலம் நம்மிடம் இருந்து உதிர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் காலத்தின் ஆணி வேர் நம் நினைவுகளில் பத்திரமாகத் தேங்கி விடுகிறது. அதிலும் சொந்த ஊராகக் கருதும் ஊரும் இளமைக் காலமும் சற்றே அதிக வண்ணங்களுடன் நினைவுகளில் பளீரென மின்னுகின்றன. அதில் நம் எல்லோருக்கும் ஒரு அதீதமான கிளர்ச்சி மன நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறான மன நிலையில் உருவான கதைகளின் தொகுப்பே இந்த நூல்.”

தனபால் பத்மநாபன், திரைப்பட இயக்குனர், iGene DI & VFX Studio, Chennai

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

மஹேஷ் குமார்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் ஒரு இயந்திரப் பொறியியல் பட்டதாரி. சமூகவியலில் முதுகலைப் பட்டதாரியும் கூட. 2007 பிற்பகுதியிலிருந்து சிங்கப்பூரில் பன்னாட்டு வங்கி ஒன்றில் பணி புரிந்து வருகிறார். சில ஆண்டுகள் விளம்பர உலகில் பணிபுரிந்ததும், பரந்த வாசிப்பும்,  கற்பனைத்திறனையும், மொழிவளத்தையும் மேம்படுத்தியது என்கிறார். மேலும் சிங்கப்பூர் சூழல் மக்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தவும், இலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கவும் ஊக்கம் அளிக்கிறது என்கிறார். 

ஓவியம், கர்நாடக இசை, பயணம், புகைப்படம் எடுத்தல், மராத்தான்  ஓட்டம், தன்னார்வத் தொண்டூழியம் என்று பல திசைகளில் ஆர்வமுள்ள இவர் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் கவிதை, கதைகள் எழுதி வருகிறார்.  இந்தி, உருது, மலையாள மொழிக்கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். உலகின் பல பகுதிகளில் பணி புரிந்ததும், பல்வேறு மொழிகள் கற்றதும், பல மொழி இலக்கியங்களை அணுக முடிந்ததையும் பெரும்பேறாகக் கருதுகிறார். 2017ல் தமிழ்க்கவிதைப் பிரிவில் சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் வழங்கும் “தங்கமுனை சிறப்பு விருது” பெற்றார். 2018 ஜூன் முதல் சிங்கப்பூரில் வெளிவரும் “சிராங்கூன் டைம்ஸ்” என்ற தமிழ் மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்துவருகிறார்.

Read More...

Achievements

+8 more
View All