Share this book with your friends

Yennathil Malarndha Vanna Malargal / எண்ணத்தில் மலர்ந்த வண்ண மலர்கள்

Author Name: Dr. C. Natesan | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்நூலின் ஆசிரியர் டாக்டர். சி. நடேசன் அவர்கள், தனது அநுபவங்களால் அவ்வப்போது எண்ணத்தில் தோன்றிய கருத்துகளைத்—தெரிவுகளைப் பல்வகையான கவிதைகளாக ஆக்கியுள்ளமையினால், ”எண்ணத்தில் மலர்ந்த வண்ண மலர்கள்” என்னும் தலைப்பினை இந்நூலுக்குச் சூட்டியுள்ளார். இந்நூலில், ஆன்மிகம், தேசிய ஒருமைப்பாடு, தாய்மொழிப்பற்று, வாழ்க்கைத் தத்துவம், குழந்தைகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்ட ஒன்பது அத்தியாயங்களில் தமிழ் மரபு மற்றும் புதுக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூல், தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான அனைத்து பா (செய்யுள்) வகைகளுக்கான  கவிதைகளையும்  உள்ளடக்கியுள்ளது.

Read More...

Sorry we are currently not available in your region.

Sorry we are currently not available in your region.

Also Available On

டாக்டர். சி. நடேசன்

இந்நூலின் ஆசிரியர் டாக்டர். சி. நடேசன், சேலம் மாவட்டத்தில் உள்ள அக்கமாப்பேட்டை கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த பிறகு, "சேலம் மாவட்ட மலைவாழ் பழங்குடியின மக்களின் பாடல்கள்" என்ற ஆய்வறிக்கையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘முனைவர்’ பட்டம் பெற்றார். 

1978 முதல் 1980 வரை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் சமூக மானுடவியலாளர் டாக்டர். மேட்டிசன் மைன்ஸ் உடன் இணைந்து “தமிழ்ச் சமூகம்” குறித்த ஆய்வுப் பணிகளை, சென்னை மற்றும் சேலம் மாவட்டங்களில் மேற்கொண்டர். மேலும், “தெய்வீக மாந்தரீகம்” குறித்தும் பல அரிய ஆய்வுகளை மேற்கொண்டவர். 

திருச்சி அகில இந்திய வானொலியின் நாட்டுப்புறத் தமிழ் இசைக் கலைஞர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்று இருந்தார். தமிழில் பக்தி பாடல் நூல்கள் மற்றும் ஆடியோ இசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும், மற்றும் துறைத் தலைவராகவும் 33 வருடங்கள் பணியாற்றி 2001 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்போது, இவர் தமிழ் பக்திப் பாடல்களை இயற்றி வருகிறார்.

Read More...

Achievements