Share this book with your friends

Aalakaalan / ஆலகாலன் Ivan Karpanayin Uchaththai Thaandiyavan / இவன் கற்பனையின் உச்சத்தை தாண்டியவன்

Author Name: R. Sethuraman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அன்று பார்கடல் கடையும் போது அமிர்தம் உட்பட பல அற்புதங்களோடு வெளிப்பட்டு பிரபஞ்சத்தை அச்சுறுத்திய ஆலகாலம், ஒரு காரணம் கொண்டு அவனது முழுசக்தியோடு பூலோகத்தை தாக்க முயற்சித்தால்  என்னவாகும்? அன்று அவனின் சக்திக்கும் முன் தேவரும், அசுரர்களுமே அஞ்சியிருக்க இன்று இதிலிருந்து நம்மை மீட்கும் சக்தி எது? என்பதை பரபரப்பாக சொல்வதே ஆலகாலன்

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

இரா. சேதுராமன்

சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணத்திலிருந்து வந்தவர்.

பொதுவாக அமைதியானவராக தெரிந்தாலும் கருத்தியல் ஆழம் கொண்டவர். பள்ளிப்பருவ நாட்களில், தன் நண்பர்களுடன் சுற்றும் நேரத்தை அதிகரிப்பதற்காகவே அதிகாலை நடைபயிற்சியை தொடங்கி, அதே நேரத்தில் சிறு சிறு திகில் கதைகளை சொல்லி... கூட வரும் நண்பர்களை பகீர் அடையவைப்பார்.

பிறகு நாளடைவில் தன்னுள் ஊறிய கற்பனைகளை வைத்து உருவாக்கிய முதல் அமானுஷ்ய நாவல் தான் ‘யாதிலும் மேலான’. இதுவரை இவரின் இம்முகம் அறியாத நண்பர்களும், நலன் விரும்பிகளும் வியந்திருந்தனர். அதில் கொடுக்கப்பட்ட தகவல்களும், சாஸ்திரங்களும் உண்மையா என ஆராயும் அளவு பல கற்பனைகளை அதில் கலந்திருந்தார். சில நண்பர்களோ  நீதான் ‘தேப்பெருமாநல்லூரின்’ முதல் நாவல் எழுத்தாளர் என புகழுவதை தனக்கு கிடைக்கும் அங்கீகாரமாக உணர்வார்.

நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கொடுத்த ஊக்கமும், சேதுராமனின் கற்பனையும் ஒரு சேர இதோ வந்துவிட்டது அமானுஷ்ய நாவல் ‘ஆலகாலன்’. இந்த தலைப்பே பல கதைகளை சொல்லும் எனும் போது நிச்சயம் மிரட்டத்தான் போகிறது ‘ஆலகாலன்’.

Read More...

Achievements

+3 more
View All